< Back
சினிமா செய்திகள்
நடிகை சமந்தாவுக்கு 2-வது திருமணமா?
சினிமா செய்திகள்

நடிகை சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

தினத்தந்தி
|
19 Sept 2022 1:16 PM IST

இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை வெளியிடவில்லை. தற்போது படங்களில் இருவரும் தீவிரமாக நடித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல் பரவியது. சோபிதாவை தனது வீட்டுக்கு நாகசைதன்யா அழைத்து சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு பட உலகினர் பேசினர்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவும் 2-வது திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் சமந்தா தரப்பில் இதனை மறுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்