நாகின் 6 புகழ் நடிகை ஐ.சி.யூ.வில் அனுமதி
|நாகின் 6 புகழ் நடிகை மஹேக் சஹால் உடல்நலம் பாதித்து ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
புனே,
இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மஹேக் சஹால். வான்டட், மெயின் ஆவுர் மிசஸ் கன்னா, யாம்லா பக்லா தீவானா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கத்ரோன் கி கில்லாடி 11 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் தற்போது, பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் உருவாக்கி வரும் நாகின் 6 தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2-ந்தேதி திடீரென படப்பிடிப்பின்போது, அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு நிம்மோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தீவிர பாதிப்பு ஏற்பட்ட உடன் பிராணவாயு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்கள் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வென்டிலேட்டரிலும் வைக்கப்பட்டார். இதுபற்றி நடிகை சஹால் கூறும்போது, நெஞ்சில் கத்தி இருப்பது போல் இருந்ததுடன், சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சி.டி. ஸ்கேன் எடுத்தனர். 8 நாட்களாக சிகிச்சையில் உள்ளேன். உடல்நலம் முன்னேற்றம் அடைந்து உள்ளது. ஆனால், ஆக்சிஜன் நிலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. இருமும்போது வலிக்கிறது என தெரிவித்து உள்ளார்.