< Back
சினிமா செய்திகள்
படமாகும் பல்லவர் கோவில் மர்மங்கள்
சினிமா செய்திகள்

படமாகும் பல்லவர் கோவில் மர்மங்கள்

தினத்தந்தி
|
13 Oct 2023 11:55 AM IST

பல்லவர் கோவிலை சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கதையே `நந்திவர்மன்' என்ற புதிய படம்.

பெருமாள் வரதன் டைரக்டு செய்துள்ள புதிய சரித்திர கதையம்சம் உள்ள திரில்லர் படத்துக்கு `நந்திவர்மன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போஸ் வெங்கட், நிழல்கள் ரவி ஆகியோரும் உள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் பெருமாள் வரதன் கூறும்போது, ``செஞ்சி கோட்டை அருகே உள்ள அனுமந்தபுரத்தில் பல்லவர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்டு கிடக்கிறது. இந்தக் கோவில் பற்றி தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்கிறார்கள். அவர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவியும் செல்கிறார். அப்போது அங்கு நடக்கும் மர்மங்கள் என்ன என்பது கதை.

செஞ்சி கோட்டையை சுற்றிலும் ஐந்து குடைவரை கோவில்கள் உள்ளன.அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் இப்போதும் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இவற்றை வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கதையே இந்தப் படம். படத்தின் ஆரம்பத்தில் அனிமேஷன் மூலம் வரலாற்று சம்பவங்கள் சொல்லப்படும். ஒரு சரித்திர படத்தை பார்க்கும் உணர்வோடு உருவாக்கி உள்ளோம்'' என்றார். இந்தப் படத்தை அருண்குமார் தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்