< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
டைரக்டர் மிஷ்கின் இசையமைப்பாளர் ஆனார்
|1 July 2022 4:23 PM IST
டைரக்டர் மிஷ்கின், ‘டெவில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
'சவரக்கத்தி' படத்தின் டைரக்டர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படம், 'டெவில்.' இந்தப் படத்தில் விதார்த், பூர்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் டைரக்டர் மிஷ்கின் நடிக்கிறார். இவர்களுடன் புதுமுகங்கள் ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள். மாறா, குதிரைவால் ஆகிய பாடங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துக் குமார், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.
டைரக்டர் மிஷ்கின், இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே அவர் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் இயக்கிய படங்களின் பின்னணி இசையிலும் அவருக்கு பங்கு இருக்கிறது.