< Back
சினிமா செய்திகள்
சாந்தனு, ஹன்சிகா நடித்துள்ள மை3 வெப் தொடர் - ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியீடு
சினிமா செய்திகள்

சாந்தனு, ஹன்சிகா நடித்துள்ள 'மை3' வெப் தொடர் - ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியீடு

தினத்தந்தி
|
15 Sept 2023 1:54 AM IST

'மை3' வெப் தொடர் செப்டம்பர் 15-ந்தேதி(இன்று) முதல் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

சென்னை,

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ், தற்போது 'மை3' என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் சாந்தனு, ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஜனனி, ஆஷ்னா சாவேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'மை3' வெப்தொடரை 'டிரெண்ட்லவுட்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேசன் இசையமைத்துள்ளார். 'மை3' வெப்தொடர் செப்டம்பர் 15-ந்தேதி(இன்று) முதல் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்