< Back
சினிமா செய்திகள்
எனது காதல் செத்துப்போனது - விவாகரத்து பற்றி சோனியா அகர்வால்...!
சினிமா செய்திகள்

'எனது காதல் செத்துப்போனது' - விவாகரத்து பற்றி சோனியா அகர்வால்...!

தினத்தந்தி
|
26 Aug 2023 1:24 PM IST

சோனியா அகர்வால், டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார்

தமிழில் தனுஷ் ஜோடியாக 'காதல் கொண்டேன்' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த சோனியா அகர்வால், டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

சொந்த வாழ்க்கை குறித்து சோனியா அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "இயக்குனர் செல்வராகவன் முரட்டுப்பிடிவாதம் கொண்டவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் அப்படி இல்லை. அமைதியானவர். எப்போதும் கதை வசனம் எழுதிக்கொண்டு பிசியாகவே இருப்பார்.

எங்களின் திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமே தெரியும். இப்போது அவர் செல்லும் வழியில் எப்படி சந்தோஷமாக இருக்கிறாரோ, அப்படி நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கணவன்-மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு சினேகிதராக பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன்.

திருமணமான புதிதில் நான் நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் நிர்ப்பந்தித்தனர். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க வேண்டி வந்தது. விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன்'' என்றார்.

மேலும் செய்திகள்