< Back
சினிமா செய்திகள்
என் உயிரே... உலகமே... நயன்தாரா பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்திய விக்னேஷ் சிவன்...!

Image Credits: Instagram.com/wikkiofficial

சினிமா செய்திகள்

என் உயிரே... உலகமே... நயன்தாரா பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்திய விக்னேஷ் சிவன்...!

தினத்தந்தி
|
18 Nov 2023 1:26 PM IST

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'லவ் யூ என் உயிரே, உலகமே... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், என் வாழ்வின் அனைத்து அழகும் அர்த்தமும் நீயும் உன் மகிழ்ச்சியும்தான்' என்று பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பதிவு :

மேலும் செய்திகள்