'என் தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது' - இயக்குனர் இளனின் பதிவு வைரல்
|'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
சென்னை,
'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.
இந்தநிலையில், 'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது, இப்படத்தின் இயக்குனர் இளன் எக்ஸ் பக்கத்தில் தனது தந்தை குறித்து பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில்,
'ஸ்டார் படத்தில் என் அப்பா தோன்றியபோது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைந்தது. என் வாழ்வில் இது எனக்கு சிறந்த தருணமாக இருக்கும். என் தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.