< Back
சினிமா செய்திகள்
என்னுடைய கேப்டன் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பார் -சமுத்திரகனி
சினிமா செய்திகள்

என்னுடைய கேப்டன் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பார் -சமுத்திரகனி

தினத்தந்தி
|
29 Dec 2023 12:23 AM IST

விஜயகாந்த் தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார்.

90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான சமுத்திகனி நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் மனதிற்காக தான் 'நெறஞ்ச மனசு' என்று தலைப்பு வைத்தேன். அந்த 72 நாட்கள் உங்களோடு இருந்தது, ஒரு மாபெரும் சக்தியோடு இருந்த மாதிரி இருக்கிறது. அந்த நாட்கள் இன்றும் பசுமையாக என் மனதில் இருக்கிறது. இன்று நீங்கள் இல்லை என்று சொல்கிறார்கள். என் மனது நம்ப மறுக்கிறது.

என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பார். அவர் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் கேப்டன். உங்கள் நல் எண்ணமும் இந்த சமூகத்தின் மீது நீங்கள் வைத்த பார்வையும் எனக்கு தெரியும். அதை நாங்களும் முன்னெடுக்கிறோம் கேப்டன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கேப்டன்" என்று பேசினார்.

மேலும் செய்திகள்