< Back
சினிமா செய்திகள்
Muthaiya plans for a multistarrer with Gautham Karthik and Vikram Prabhu
சினிமா செய்திகள்

முத்தையா படத்தில் இணையும் கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு?

தினத்தந்தி
|
17 Jun 2024 12:36 PM IST

முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த படம் 'தேவராட்டம்'.

சென்னை,

கிராமத்து பின்னணியில் படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் முத்தையா. இவர் கடைசியாக இயக்கிய படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

தற்போது, இயக்குனர் முத்தையா தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இவரின் அடுத்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த படம் 'தேவராட்டம்'. இப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தையும் முத்தையாதான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இந்த இரண்டு நடிகர்களும் சேர்ந்து முத்தையா படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்