< Back
சினிமா செய்திகள்
பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஜெயிலர்  படத்தின் இசை வெளியீட்டு விழா..
சினிமா செய்திகள்

'பிரம்மாண்டமாக நடைபெற உள்ள 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா..

தினத்தந்தி
|
22 July 2023 4:23 PM GMT

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

சென்னை,

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

நெல்சன் இயக்கத்தில், ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்