ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இடையே கருத்து வேறுபாடு?
|இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதி விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாக பரவி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.
ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சில மாதங்களாகவே ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி இருவருமே ஒன்றாக இல்லை, பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இவர்கள் இருவரும் பிரிய இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.