தனுசுக்கு வில்லனாக தேவா?
|தனுஷ் 50-வது படத்தில் வில்லனாக நடிக்க தேவாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து தனுஷ் தனது 50-வது படத்தில் நடிப்பதுடன் அவரே டைரக்டும் செய்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் தனுசுக்கு வில்லனாக நடிக்க பிரபல இசையமைப்பாளர் தேவாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுசே தேவாவை தொடர்பு கொண்டு வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. தேவாவுக்கு வடசென்னை மக்கள் பாஷையில் நன்றாக பேச வரும் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தேவா நடிப்பது குறித்து விரைவில் தெரிய வரும்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.