< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி கரம் நீட்டிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்
|25 Nov 2023 8:16 AM IST
ஜி.வி. பிரகாஷ் தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை,
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தனது 25 வது படமான 'கிங்ஸ்டன்' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார். சிறுவனின் மூளைக்கு அருகில் கட்டி ஒன்று உருவாகியுள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இதற்காக ஆன்லைனில் நிதியுதவி கோரிய நபருக்கு ரூபாய் 75 ஆயிரத்தை வழங்கியுள்ளார். இதனை ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் முறையில் வழங்கியுள்ளார். அதில், 'என்னால் முடிந்த சிறிய உதவி' என்று குறிப்பிட்டுள்ளார்.