< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்
|28 Dec 2023 9:20 PM IST
பசியாற்றிய வள்ளல் என்று விஜயகாந்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழ்ந்துள்ளார்.
சென்னை,
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில், திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது, என்று பதிவிட்டுள்ளார்.