< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
|27 Feb 2024 8:55 AM IST
அண்ணாசாலை தர்கா சந்தனக்கூடு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
சென்னை,
சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவரை காண அங்கு ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆடி காரில் வந்திருந்த அவர் கூட்ட நெரிசலால் சிக்கி தவித்தார். பின்பு கூட்டம் அதிகரித்ததால் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.