< Back
சினிமா செய்திகள்
இசையமைப்பாளராகும் நடிகர் விஜய் சேதுபதி
சினிமா செய்திகள்

இசையமைப்பாளராகும் நடிகர் விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
28 Oct 2022 7:46 AM IST

விஜய்சேதுபதி இசையமைப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த வருடம் கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் வந்தன. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். மும்பைக்கார், ஜவான், மேரி கிறிஸ்துமஸ் ஆகிய இந்தி படங்கள் மற்றும் மைக்கேல் என்ற தெலுங்கு படமும் கைவசம் உள்ளன. அடுத்து விஜய்சேதுபதி இசையமைப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதிக்கு நடிப்பை தவிர்த்து இசைத்துறையிலும் ஈடுபாடு உள்ளது. இசை பயில வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் நேரம் அமையவில்லை. தற்போது இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவிடம் விஜய் சேதுபதி இசை கற்று வருகிறார். விஜய்சேதுபதி நடித்து 2016-ல் வெளியான சேதுபதி படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை கற்று முடித்ததும் புதிய படமொன்றுக்கு விஜய்சேதுபதி இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்