< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
|19 Jan 2023 9:55 PM IST
முகேன் ராவ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
சென்னை,
பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் 'வேலன்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த நிலையில் முகேன் ராவ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.
டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கும் இந்த படத்திற்கு 'ஜின்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முகேன் ராவ் மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்கிறார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார்.