< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'முபாசா: தி லயன் கிங்' பட டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
30 April 2024 7:45 PM IST

சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா: தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 -ம் ஆண்டில் ஒன்றும், 2019-ம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான்.1994-ம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.

லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசியங்களை காட்டு விலங்குகளின் மூலம் கடத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சம்.

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா : தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். "இந்த கதை மலைகள் மற்றும் நிழல்களுக்கு அப்பால் ஒளியின் மறுபுறத்தில் இருந்து தொடங்குகிறது. நம் வாழ்வை மாற்றி அமைக்கும் சிங்கம்" என பின்னணியில் ஒலிக்கும் குரலுடன் டிரெய்லர் ஆரம்பமாகிறது. அடுத்த காட்சி காட்டுயிர்கள் ஒன்றாக இருப்பதை போல அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பனி போர்த்திய சூழலும் அறிமுகமாகிறது.

மேலும் செய்திகள்