< Back
சினிமா செய்திகள்
கதாநாயகனான எம்.எஸ்.பாஸ்கர்
சென்னை
சினிமா செய்திகள்

கதாநாயகனான எம்.எஸ்.பாஸ்கர்

தினத்தந்தி
|
9 Feb 2023 9:10 AM IST

தமிழில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் கதாநாயகர்களாக மாறி உள்ளனர். தற்போது அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கரும் கதாநாயகனாகி இருக்கிறார்.

'அக்கரன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

வெண்பா, கபாலி விஸ்வநாத், நமோ நாராயணா, ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் கே.பிரசாத் டைரக்டு செய்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் நாயகனாக நடிப்பது குறித்து டைரக்டர் அருண் கே.பிரசாத் கூறும்போது, "எம்.எஸ்.பாஸ்கரிடம் கதையை சொல்லி அவர்தான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் கதை பிடித்துபோய் உடனே ஒப்புக்கொண்டார். எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள்.

ஒரு மகள் தேர்வு எழுத செல்லும்போது அரசியல் காரணமாக கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். மகளின் சாவுக்கு காரணமானவர்களை எம்.எஸ்.பாஸ்கர் எப்படி பழிவாங்குகிறார் என்பது கதை. வில்லனுடன் எம்.எஸ்.பாஸ்கர் மோதும் சண்டை காட்சியும் உள்ளது'' என்றார்.

மேலும் செய்திகள்