< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஹாரி பாட்டருடன் மிருணாள் தாக்கூர்- சமூகவலைதளத்தில் வைரலான புகைப்படம்
|15 Dec 2023 6:02 PM IST
சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
நியூயார்க்,
சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் சவுரவ் இயக்கத்தில் நானியுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய் நான்னா. இந்த திரைப்படம் கடந்த 7 ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் பேமிலி ஸ்டார் மற்றும் ஹிந்தியில் பூஜா மேரி ஜான் என்ற படத்திலும் மிருணாள் தாக்கூர் நடித்து வருகிறார்.
தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிருணாள், நியூயார்கில் எதிர்பாராத விதமாக ஹாரிபாட்டர் படத்தின் ஹீரோ டேனியலை நேரில் சந்தித்தார். அப்போது டேனியலுடன் எடுத்த புகைப்படத்தை மிருணாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.