ஐதராபாத்தில் சாமி தரிசனம் செய்த மிருணாள் தாகூர்
|நேற்று, மிருணாள் தாகூர் ஐதராபாத்தின் பல்காமாபேட்டில் உள்ள ஸ்ரீ எல்லம்மா போச்சம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஐதராபாத்,
சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் சவுரவ் இயக்கத்தில் நானியுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஹாய் நான்னா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பெயரை படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு பேமிலி ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், ஹிந்தியில் பூஜா மேரி ஜான் என்ற படத்திலும் மிருணாள் தாகூர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மிருணாள் தாகூர் ஐதராபாத்தின் பல்காமாபேட்டில் உள்ள ஸ்ரீ எல்லம்மா போச்சம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவருடன் பேமிலி ஸ்டார் படக்குழுவினரும் சென்றனர். இது குறித்தான வீடியோவை ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.