'முத்தக்காட்சிகள் இருந்ததால் பல திரைப்படங்களை மறுத்தேன்' - மிருணாள் தாக்கூர்
|முத்தக்காட்சிகள் இருந்ததால் பல படங்களை மறுத்தேன் என்று மிருணாள் தாக்கூர் கூறினார்.
மும்பை,
பிரபல நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் நடித்த சீதா ராமம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக பேமிலி ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சினிமாவில் பல படங்களை தவறவிட்டது குறித்து மிருணாள் தாக்கூர் பேசினார். அவர் பேசியதாவது,
" நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை நான் உண்மையில் விரும்பியதில்லை. அதை எனது பெற்றோரும் ஏற்கவில்லை. இதனால் பல படங்களை மறுத்தேன். ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும். உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், நீங்கள் அதைப் பற்றி பேசலாம். முத்தக்காட்சிகளில் நடிக்காததால் நான் பல திரைப்படங்களை தவறவிட்டேன்.
இந்தவிதமான காட்சிகளில் நடிக்க நான் பயப்படுவேன். இதனால் அந்த காட்சி வேண்டாம் என்று சொல்வேன். ஆனால் எத்தனை நாட்கள் இவ்வாறு வேண்டாம் என்று சொல்ல முடியும்?. என் பெற்றோருடன் உட்கார்ந்து, என்னால் படத்தின் இந்த பகுதியை இழக்க முடியாது. சில நேரங்களில் அந்த காட்சி இருக்கிறது, அது என் விருப்பம் இல்லை, இவ்வாறு சொல்ல வேண்டியதிருந்தது." என்றார்