< Back
சினிமா செய்திகள்
சீதா ராமம் பட நடிகையின் கிக் பாக்சிங் வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

'சீதா ராமம்' பட நடிகையின் கிக் பாக்சிங் வீடியோ வைரல்

தினத்தந்தி
|
12 May 2024 5:02 PM IST

நடிகை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். சீதா ராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சியில் மிகவும் அக்கறைகொண்டவர் மிருணால் தாக்கூர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை மிருணால் ஜிம் மட்டுமின்றி யோகா, கார்டியோ பயிற்சிகள் என பலவற்றின் மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து பராமரித்து வருகிறார். இதை தவிர மிருணாள் தனது தினசரி டயட்டிலும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது டயட்டில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுவகைகள் நிச்சயம் சேர்த்துக் கொள்வாராம். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிருணாள் தாக்கூர் பதிவிட்டுள்ள ஒர்க்அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்