< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

ஜெயிலர் வெற்றி: அனிருத்தை பாராட்டி போர்ச்சே கார் பரிசளித்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!

தினத்தந்தி
|
4 Sept 2023 8:28 PM IST

ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தை பாராட்டி காசோலை வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரூ. 600 கோடி வசூலைக் கடந்து ஜெயிலர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு காசோலை மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தார்.

இதேபோல் படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசாக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கினார். ரசிகர்கள் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஏதுமில்லையா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் காசோலையை அளித்து, போர்ச்சே கார் பரிசளித்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

மேலும் செய்திகள்