< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜான்வி கபூர் நடித்த படம் இரண்டு வாரங்களில் ரூ.50 கோடி வசூல்
|15 Jun 2024 1:58 PM IST
மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மே மாதம் 31-ம் தேதி வெளியானது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடித்த திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குனர் ஷரன் ஷர்மா இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ராஜேஷ் சர்மா, குமுத் மிஸ்ரா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் கடந்த மே மாதம் 31-ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.