< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'மிஸ்டர் பச்சன்': போஸ்டர் வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த ரவி தேஜா
|23 July 2024 8:19 PM IST
நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'மிஸ்டர் பச்சன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. 'மாஸ் மகாராஜா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனது திரையுலக வாழ்க்கையை 'கர்தவ்யம்' படத்தில் மூலம் தொடங்கினார். பின்னர், பெங்கால் டைகர், ராஜா தி கிரேட், வால்டேர் வீரய்யா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது இவர் ஹரிஸ் ஷங்கர் இயக்கிய 'மிஸ்டர் பச்சன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு ரவி தேஜா அறிவித்துள்ளார். அதன்படி, வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.