< Back
சினிமா செய்திகள்
படமான ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை
சினிமா செய்திகள்

படமான ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை

தினத்தந்தி
|
18 April 2023 6:17 AM IST

இளையராஜா இசையில் "ஸ்ரீ ராமானுஜர்" வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில் ஸ்ரீராமானுஜர் கதாபாத்திரத்தில் டி.கிருஷ்ணன் நடித்துள்ளார். அவரே இதற்கான திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணன், காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ரவி வி.சந்தர் டைரக்டு செய்துள்ளார். படம் குறித்து ராமானுஜராக நடித்துள்ள டி.கிருஷ்ணன் கூறும்போது, "இது முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம். ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல, இந்து தர்மத்தின் சகாப்தம் ஆவார். சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி வேண்டும் என்ற உணர்வை மக்களிடையே உருவாக்கியவர். இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவின் இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு எடுத்துள்ளோம். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது'' என்றார். ஒளிப்பதிவு: மாதவராஜ், படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்