நடிகர் தனுஷ் குரலில் வெளியான 'வாத்தி' பட பாடல் - ரசிகர்கள் உற்சாகம்
|‘ஒரு தல காதல தந்த..’ என்ற பாடலை தனுஷின் குரலில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை,
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படம் கடந்த 17-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது, நடிகர் தனுஷ் இந்த படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அசத்தினார்.
இந்நிலையில் 'வாத்தி' படத்தில் இடம்பெற்ற 'ஒரு தல காதல தந்த..' என்ற பாடலை தனுஷின் குரலில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இந்த பாடலை நடிகர் தனுஷின் குரலில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
A big thank you ♥️ #Vaathi https://t.co/0BQDhwuIjD
— Dhanush (@dhanushkraja) February 23, 2023 ">Also Read: