< Back
சினிமா செய்திகள்
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம்
சினிமா செய்திகள்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம்

தினத்தந்தி
|
13 Jan 2023 7:25 AM IST

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் `நான் கடவுள் இல்லை'.

சாக்ஷிஅகர்வால் இந்தப் படத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் சாக்ஷிஅகர்வால் நடித்த ஒருசண்டைக்காட்சி, உடற்பயிற்சிக் கூடத்தில் படமாக்கப்பட்டது. இதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் நடித்ததைப் பார்த்து கனல்கண்ணன் பாராட்டி உள்ளார். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இன்னொரு இளம் நாயகனாக யுவன் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்தப் படத்தில் இனியா பாசமான தாயாகவும், பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மற்றும் டயானாஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதம் படம் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்