< Back
சினிமா செய்திகள்
டேட்டிங் செல்ல சுகானா கானுக்கு தாயார் வழங்கிய அறிவுரை...
சினிமா செய்திகள்

டேட்டிங் செல்ல சுகானா கானுக்கு தாயார் வழங்கிய அறிவுரை...

தினத்தந்தி
|
19 Sept 2022 6:54 PM IST

நடிகர் ஷாருக் கானின் மகள் சுகானா கானுக்கு டேட்டிங் செல்வது பற்றிய முக்கிய அறிவுரை ஒன்றை கவுரி கான் வழங்கியுள்ளார்.


புதுடெல்லி,


தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. திரை பிரபலங்களிடம் விவாதிக்க கூடிய நகைச்சுவை கலந்த இந்த நிகழ்ச்சியை இயக்குனர், நடிகர் உள்பட பன்முக தன்மைகளை கொண்ட கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் வரவிருக்கிற எபிசோடில் நடிகர் ஷாருக் கானின் மனைவி கவுரி கான் பங்கேற்க கூடிய நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 'பாலிவுட் திரை நட்சத்திரங்களின் மனைவிகளின் உயர்தர வாழ்க்கை' என்ற நிகழ்ச்சியில் ஒன்றாக நடித்துள்ள கவுரி மற்றும் அவரது தோழிகளான மஹீப் கபூர் மற்றும் பாவனா பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மூன்று பேரும் பல ஆண்டு கால தோழிகள். இவர்களது குழந்தைகளான சுகானா கான், ஷனாயா கபூர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரும் சிறு வயது முதலே தோழிகளாக வளர்ந்தவர்கள். அடிக்கடி ஒன்றாக புகைப்படங்களையும் எடுத்து கொண்டவர்கள்.

இந்த நிகழ்ச்சியில், கவுரி கானிடம் நிகழ்ச்சியை நடத்தும் கரண் கேட்ட கேள்வி ஒன்றில், உங்களது மகள் சுகானாவுக்கு டேட்டிங் செல்லும்போது என்ன அறிவுரை வழங்குவீர்கள்? என அமைந்திருந்தது.

அதற்கு கவுரி கான், ஒரே நேரத்தில் 2 பேருடன் டேட்டிங்கில் ஈடுபடாதே என்பேன் என்று கூறுகிறார். இதனை கேட்டு கரண் நிறுத்த முடியாத அளவுக்கு சிரிக்கிறார். கவுரியும் சிரித்து கொள்கிறார்.

ஷாருக் கான் மற்றும் உங்களுக்கு இடையேயான அன்பு கதையை விவரிப்பதற்கு சரியான, திரைப்படத்தின் பெயர் எதுவாக இருக்கும் என கரண் கேட்டுள்ளார். அதற்கு, தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே என கவுரி பதிலளிக்கிறார்.

இதனை கேட்டு, நானும் அதனை விரும்புகிறேன் என்று கரண் கூறுகிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் கரண் வெளியிட்டு உள்ளார். அதனை ஒரு லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து உள்ளனர்.



மேலும் செய்திகள்