தாய்மை அனுபவம்; இலியானா நெகிழ்ச்சி
|தாய்மை அனுபவம் குறித்து வலைதளத்தில் இலியானா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது.
தமிழில் கேடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா. 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் டோலனை காதலிப்பதாக கூறப்பட்டது.
திருமணம் ஆகாமலேயே இலியானா கர்ப்பமாகி ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டோலன் என்று பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் தாய்மை குறித்து வலைதளத்தில் இலியானா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், "தாய்மையின் இனிமையை நான் முழுமையாக அனுபவிக்கிறேன். இரண்டு மாதங்கள் முடிவடைந்த என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்து விட்டேன்.
நம் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அனுபவிக்கும் வேதனையை எப்படி தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை யாரும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். எல்லா பெண்களுக்குமே தாயானதும் தானாகவே இதெல்லாம் தெரிந்து விடுகிறது.
காதலன் நான் கஷ்டத்தில் இருந்தபோது தைரியத்தை கொடுத்தார். எனது கண்ணீரைத் துடைத்தார். சிரிக்க வைத்தார். அவர் என் பக்கத்தில் இருந்தால் எதுவும் கஷ்டமாக இருக்காது. தற்போது என் குழந்தையுடன் ஆனந்தமாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.