< Back
சினிமா செய்திகள்
நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு மோசமான பழக்கம் இருந்தது: பிரபல நடிகை பகீர் தகவல்
சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு மோசமான பழக்கம் இருந்தது: பிரபல நடிகை பகீர் தகவல்

தினத்தந்தி
|
25 April 2023 2:46 PM IST

நடிகை ஸ்ரீதேவி அவரது அம்மாவால் தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார் என நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஸ்ரீதேவி தனது நடிப்பால் மட்டுமல்ல, அவரது அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்து இருக்கிறார். இன்றளவும் இவரது எந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மக்கள் மனதில் பழைய நினைவுகள் ஏற்படுத்தும். தமிழ், இந்தி திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தனது சினிமா வாழ்க்கையில் தொடங்கிய நடிகை ஸ்ரீதேவி, பின்னர் கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் நடிகை ஸ்ரீதேவி கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தார்.

பரபரப்பாகப் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்த ஸ்ரீதேவி, 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் இரண்டாவது மனைவி ஆவார். திருமணத்தின் போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதற்குச் சிறிது இடைவெளி விட்டிருந்தார் நடிகை ஸ்ரீதேவி. அப்போது சில படங்களில் மட்டும் வந்தார். அதற்குப் பிறகு இவரது மகள் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிக்கத் தொடங்கினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு நடிகை ஸ்ரீதேவி சென்று இருந்தார். அப்போது இவர் குளிக்கும் டப்பில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கடந்துள்ளார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை ஸ்ரீதேவி மறைந்து தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவரது இறப்பில் இருக்கக்கூடிய மர்மங்கள் இன்னும் நீங்கவே இல்லை.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நெருக்கமான தோழிகளில் ஒருவரான நடிகை குஷ்பு பத்மினி ஸ்ரீதேவி குறித்த உண்மை சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த சம்பவம் குறித்து நடிகை குட்டி பத்மினி கூறுகையில், நடிகை ஸ்ரீதேவியின் அம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார். அவரைப்போலவே தனது மகளுக்கும் ஸ்ரீதேவிக்கும் இரவு தூங்குவதற்கு ஒயின் ஊற்றிக் கொடுத்து மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆக்கி விட்டார்.

தனது தாயால் மதுப்பழக்கத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் அடிமையானார். இறுதியாக நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை" என வருத்ததுடன் தெரிவித்தார்.sMother Was The Reason Behind Drinking Habit Of Sridevi; Kutty Padmini Words Goes Viral

நடிகை ஸ்ரீதேவி குறித்து நடிகை குட்டி பத்மினி கூறிய இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்