< Back
சினிமா செய்திகள்
தாய்ப்பாசம்-அறிவியல் கலந்த படம் கணம் - சர்வானந்த்
சினிமா செய்திகள்

தாய்ப்பாசம்-அறிவியல் கலந்த படம் 'கணம்' - சர்வானந்த்

தினத்தந்தி
|
2 Sept 2022 2:24 PM IST

டைம் டிராவல், தாய்ப்பாசம், அறிவியல் ஆகிய மூன்று அம்சங்களும் கலந்து ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு, 'கணம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கதாநாயகனாக சர்வானந்த் நடிக்கிறார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது-

"இதுவரை நான் வர்த்தக ரீதியிலான படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறேன். இது மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம்? என்பதுதான் கதையின் கரு.

ரீதுவர்மா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். நாசர் விஞ்ஞானியாக நடித்துள்ளார். மூன்று கதாநாயகர்களில் ஒருவராக சதீஷ் நடித்து இருக்கிறார். இன்னொரு நாயகன், ரமேஷ் திலக். மூன்று பேருக்குமே சமமான கதாபாத்திரங்கள். ஸ்ரீகார்த்திக் டைரக்டு செய்து இருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது."

மேலும் செய்திகள்