மாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை - நடிகர் ரன்வீர் சிங் வருத்தம்
|மாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை என இந்தி திரையுலகில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் பத்மாவத் படத்தில் வில்லத்தனமான வேடத்தில் வந்து பிரபலமானார். இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து தயாரான 83 படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து 2018-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் குடும்ப வாழ்க்கை குறித்து ரன்வீர் சிங் அளித்துள்ள பேட்டியில், ''என் மாமியாருக்கு என்னை கண்டால் சுத்தமாக பிடிக்கவில்லை. நான் புதிய டிரெண்டுக்கு ஏற்றபடி இருப்பேன். சத்தமாக பேசுவேன். முக்கியமாக நான் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறேன். அதே ஸ்டைல் பேஷனோடு இருக்க விரும்புவேன். ஆனால் இதுவெல்லாம் என் மாமியார் வீட்டில் செல்லாது. அவர்கள் சம்பிரதாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் பழக்கங்கள் எதுவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. முக்கியமாக தீபிகா படுகோனேவின் அம்மாவான எனது மாமியாருக்கு எனது செயல்கள் பிடிக்கவில்லை. இதனால் மிகவும் கஷ்டப்பட்டேன். அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க முயற்சி செய்தேன். மாமியார் வீட்டிற்கு வரும்போது கலாசார உடை அணிந்தேன்" என்றார்.