< Back
சினிமா செய்திகள்
பாடகர் பெயரில் பண மோசடி
சினிமா செய்திகள்

பாடகர் பெயரில் பண மோசடி

தினத்தந்தி
|
31 July 2023 12:06 PM IST

இந்திய அளவில் பிரபலமான பாடகர் சோனு நிகம். இவர் தமிழில் விழியில் உன் விழியில், வாராயோ தோழி உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் பாடி இருக்கிறார். சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சோனு நிகம் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு பெண் பண மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோனு நிகம் ரசிகர்களை சந்தித்து உரையாட இருக்கிறார் என்றும், பாடகரின் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1,500 அனுப்பும் ரசிகர்களை சோனு நிகம் நேரில் சந்திப்பார் என்றும் அந்த பெண் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மோசடி குறித்து அறிந்ததும் சோனு நிகம் அதிர்ச்சியானார். யாரும் இந்த மோசடி தகவலை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்று சோனு நிகம் பதிவு வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்து உள்ளார்.

மேலும் செய்திகள்