மோகன்லாலின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா
|பிருத்விராஜ் இயக்கத்தில் எல்2:எம்புரான் படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.
திருவனந்தபுரம்,
கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 'ஜில்லா', 'காப்பான்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
சமீபத்தில், அவர் நடித்த படம் மலைக்கோட்டை வாலிபன். இது பெரியளவில் வெற்றிப்பெறவில்லை. ஆனாலும் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இவர் சினிமா மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பு, கல்வித்துறையையும் கவனித்து வருகிறார். இவருக்கு திரைப்படங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள் மற்றும் பிற தொழில்கள் மூலம் வருமானம் வருகிறது. மலையாளத்தில் ஒரு ரியாலிட்டி கேம் ஷோவைத் தொகுத்து வழங்குவதற்காக ரூ.18 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட ரூ.416 கோடி வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் எல்2:எம்புரான் படத்தில் நடித்து வருகிறார்.லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.