மோகன்லாலை 'வாத்து கறி' சாப்பிட அழைத்த ரசிகர் - வீடியோ வைரல்
|எல்360 படப்பிடிப்பின்போது வயதான ரசிகர் ஒருவரிடம் மோகன்லால் உரையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். தற்போது இவர் தனது 360-வது படடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை , 'சவுதி வெள்ளக்கா' பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது வயதான ரசிகர் ஒருவரிடம் மோகன்லால் உரையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், அந்த வயதான ரசிகர் "படப்பிடிப்பு கழிஞ்சோ மோனே?" அதாவது, "படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, மகனே?" என்று கேட்கிறார். அதற்கு மோகன்லால் "இல்லை, ஏன்? எங்களை அனுப்ப நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா?" என்று நகைச்சுவையாக கூறுகிறார். மேலும், மோகன்லாலுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, "தாராவு கறி" (வாத்து கறி) என்று அன்புடன் பதிலளிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது