< Back
சினிமா செய்திகள்
20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா
சினிமா செய்திகள்

20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா

தினத்தந்தி
|
22 April 2024 7:25 PM IST

மோகன்லால் - ஷோபனா இணைந்து நடிக்கும் ‘L 360' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

நடிகை ஷோபனா 1984 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 18' படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து 1984-ம் ஆண்டு கமல் நடித்து வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷோபனா. பின் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள். தற்பொழுது அவர்கள் நடிக்கும் படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

மேலும் செய்திகள்