< Back
சினிமா செய்திகள்
ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்...!
சினிமா செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்...!

தினத்தந்தி
|
8 Jan 2023 7:11 PM IST

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளார்.

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர்.

ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார். மேலும், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் இணைந்தது உறுதியானது.

மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் நடித்து இருக்கிறார். விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்