< Back
சினிமா செய்திகள்
3 ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா படம்
சினிமா செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா படம்

தினத்தந்தி
|
1 May 2023 3:41 PM IST

3 ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த படமாக 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி' உருவாகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 2020-ல் சைலன்ஸ் படம் வெளியானது. அதன்பிறகு அவருக்கு உடல் எடை கூடிய காரணத்தை காட்டி பட வாய்ப்புகள் நின்று போனது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் காதலிக்கவில்லை என்று இருவருமே மறுத்தனர். அனுஷ்காவுக்கு 41 வயது ஆகிறது.

இந்த நிலையில் அவருக்கு மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த படமாக உருவாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் திரைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்