< Back
சினிமா செய்திகள்
Minmini announces Contest #U1vibes
சினிமா செய்திகள்

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கொண்டாட மின்மினி செயலி அறிவித்துள்ள பிரத்யேக போட்டி!

தினத்தந்தி
|
8 July 2024 12:52 PM GMT

பயனர்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருப்பதால், ஷி இஸ் எ கில்லர் பாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதை மின்மினி செயலியில் பதிவிடுங்கள், என யுவன் சங்கர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை:

உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலியான மின்மினி, பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் லேபிள் நிறுவனமான U1 ரெகார்ட்ஸ்-உடன் இணைந்து ஹேஷ்டேக் "யு1 வைப்ஸ்" (#U1vibes)என்கிற சிறப்பான போட்டியை அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள தனிப்பாடலான "ஷி இஸ் எ கில்லர்" (She's a Killer) என்ற பாடலை கொண்டாடுவதற்காக மின்மினி செயலி இந்த சிறப்பான போட்டியை அறிவித்துள்ளது.

ஜூலை 5 ம் தேதி தொடங்கியுள்ள இந்த போட்டி, ஆகஸ்ட் 4 வரை நடைபெறும். "ஷி இஸ் எ கில்லர்" (She's a Killer) என்கிற பாடலுக்கு உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை எடுத்து அதை ஹேஷ்டேக் "யு1 வைப்ஸ்" (#U1vibes) என்கிற ஹேஷ்டேக் சேர்த்து மின்மினியில் பதிவிட வேண்டும்.

இந்த போட்டி குறித்து மின்மினி செயலியின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீராம் கூறும் போது" #U1vibes என்கிற இந்த போட்டிக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. மேலும் இந்த போட்டி மூலம் தாங்கள் ரசிக்கும் இசைக்கு ஏற்ப தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் , தனித்துவமான ஒரு அனுபவத்தை பெறவும் எங்களது பயனர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். மேலும் இந்த போட்டியினால் யுவனின் இசையை கொண்டாடுவதோடு அவரின் ரசிகர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு புதிய தளத்தையும் வழங்குகிறோம். இதன் மூலம் ரசிக்கும்படியான, அற்புதமான கன்டென்ட்களை காண ஆர்வமாக உள்ளோம்" என்றார்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மின்மினி செயலியை பதிவிறக்கம் செய்து" ஷி இஸ் எ கில்லர்"(She's a Killer)என்கிற பாடலுக்கு உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை எடுத்து அதை ஹேஷ்டேக் "யு1 வைப்ஸ்" (#U1vibes) என்கிற ஹேஷ்டேக் சேர்த்து மின்மினியில் பதிவிட வேண்டும்.

இந்த போட்டி குறித்து இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது. அந்தக் காணொளியில் "மின்மினி செயலியின் பயனர்களுக்கு ஆச்சர்யமூட்டும் ஏராளமான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது. எனவே ஷி இஸ் எ கில்லர்"(She's a Killer) பாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதை மின்மினி செயலியில் பதிவிடுங்கள்" என யுவன் சங்கர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள " ஷி இஸ் எ கில்லர்"(She's a Killer) என்கிற தனிப்பாடல், ஒரு பெண்ணை பார்த்த உடனே சட்டென ஒரு இளைஞனுக்குள் ஏற்படும் காதலை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2024-ல் அறிமுகமான மின்மினி செயலி இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல்.-2024 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ "சோசியல் மீடியா பார்ட்னர்" ஆக செயல்பட்டது. சி.எஸ்.கே. தொடர்பாக ஏராளமான போட்டிகளை நடத்தி நானூறுக்கும்(400-க்கும் ) அதிகமான போட்டிக்கான டிக்கெட்களை தனது பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.

மின்மினி செயலியில் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் ஏராளமான பகுதிகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான சிறிய, நடுத்தரமான மற்றும் குறு அளவிலான தமிழ் கன்டென்ட் படைப்பாளர்கள் இருக்கிறார்கள். மேலும் உலகம் முழுவதும் திறமையான புதிய படைப்பாளர்களை உருவாக்கும் முயற்சியிலும் மின்மினி ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகள்