சினிமா செய்திகள்
வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்கள்  - வைரமுத்து
சினிமா செய்திகள்

வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்கள் - வைரமுத்து

தினத்தந்தி
|
15 Jun 2024 8:43 AM IST

துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்கு, பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

சென்னை,

துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்கு, பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை உள்நாட்டில் செயல்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

துபாயில் இருக்கிறேன்; எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு. இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு.

வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்