< Back
சினிமா செய்திகள்
சந்தீப் கிஷான் நடித்துள்ள மைக்கேல் படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

சந்தீப் கிஷான் நடித்துள்ள 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
21 Oct 2022 12:06 PM IST

நடிகர் சந்தீப் கிஷான் நடித்துள்ள 'மைக்கேல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மைக்கேல்'.

கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கரண் புரொடக்சன்ஸ் மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் 'மைக்கேல்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்