'எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம்'-நடிகை ரோகிணி
|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடல் வரிகளின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் என்று நடிகை ரோகிணி கூறினார்.
பட்டுக்கோட்டை,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை சார்பில் பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரை அரங்கில் நேற்று முன்தினம் இரவு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95-வது பிறந்தநாள் விழாவும், 43-வது கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரோகிணி 'மக்கள் கவிஞர் வழியில்' என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடல் வரிகளின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர். எம்.ஜி.ஆர்., முதல்-அமைச்சர் ஆவதற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளும் ஒரு காரணம். தனக்கு பக்கபலமாக மக்கள் கவிஞரை எம்.ஜி.ஆர். வைத்துக் கொண்டார்.
உழைக்கும் வர்க்கத்தினர் படும் பாடுகளை தன்னுடைய பாடல் வரிகள் மூலம் எழுதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்வாறு பேசினார்.