< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்கும் மேக்னா ராஜ்
சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்கும் மேக்னா ராஜ்

தினத்தந்தி
|
21 Feb 2023 6:09 AM IST

நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி 2 வருடங்களிலேயே சிரஞ்சீவி சார்ஜா மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேக்னா ராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதனை மேக்னா ராஜ் தரப்பில் மறுத்தனர். மேக்னாவை மீண்டும் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. நிறைய பட வாய்ப்புகளும் வந்தன.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார். திரில்லர் கதையம்சம் உள்ள படத்தில் அவர் நடிக்கிறார். இதில் நடுத்தர வயது பெண் கதாபாத்திரத்தில் மேக்னா நடிக்கிறார். ஒரு பிரச்சினையில் சிக்கி எப்படி மீள்கிறார் என்பது கதை. கன்னடத்தில் தயாராகும் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். விஷால் ஆத்ரேயா டைரக்டு செய்துள்ளார். மேக்னா கூறும்போது, "கதையை கேட்டபோது மிகவும் பிடித்தது எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.

மேலும் செய்திகள்