திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்னாராஜ்
|மேக்னாராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது.
தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420', 'நந்தா நந்திதா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டில் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எதிர்பாராதவிதமாக சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு ராயன் என்ற மகன் இருக்கிறான்.
இதற்கிடையில் மேக்னாராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்தார். ஆனாலும் வதந்திகள் முன்பை விட வேகமாக பரவியது. இந்தநிலையில் மேக்னாராஜ் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கணவர் மற்றும் மகன் பெயரை ஒன்றாக சேர்த்து அவர் தனது கையில் டாட்டூ குத்திக்கொண்டுள்ள படம் தான் அது.
இதன்மூலம் கடந்த சில நாட்களாக வெளியாகி வந்த 2-வது திருமணம் என்ற வதந்திகளுக்கு மேக்னாராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.