அரசியல்வாதி மகனுடன் மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம்?
|தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தொடர்ந்து சிம்பு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷ் ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா, அதர்வாவுடன் பூமராங் ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் திரைக்கு வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மேகா ஆகாஷுக்கும் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் விரைவில் மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதி மகனுடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு குடும்பத்தினரும் ரகசியமாக செய்து வருவதாகவும், திருமணம் ஆகும் தகவலை மேகா ஆகாஷ் விரைவில் அறிவிப்பார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் மேகா ஆகாஷ் தொடர்ந்து நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை.