நடிகையான அனுபவம் பகிர்ந்த மேகா ஆகாஷ்
|தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தார். வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், ஒரு பக்க காதல் கதை உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகையானது குறித்து மேகா ஆகாஷ் அளித்துள்ள பேட்டியில், "நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அம்மா அப்பாவிற்கு நான் ஒரே மகள். பி.எஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் படித்தேன். முதலில் இருந்து மிகவும் கூச்ச சுபாவம். நாலுபேருடன் சேர்ந்து தைரியமாக பேச தெரியாது. என்னை மாற்றிக் கொள்ள நினைத்தேன். அதனால் தான் படித்துக் கொண்டே பாக்கெட் மணிக்காக சின்ன சின்ன விளம்பரங்களில் வந்தேன்.
அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் வந்தன. என்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் என்னோடு என் அம்மா இருந்தாக வேண்டும். படப்பிடிப்புகளுக்கு என்னோடு வந்துவிடுவார். சிக்கன் எனக்கு பிடித்த உணவு. சாக்லேட் என்றால் மிகவும் இஷ்டம். கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட் வீரர் தோனி எனக்கு பிடித்த பிரபலம். நான் அவரது தீவிர ரசிகை. எனக்கு மிகவும் பிடித்த நடிகை திரிஷா. பாடல்கள் கேட்பது புத்தகங்கள் படிப்பது என்றால் மிகவும் இஷ்டம்'' என்றார்.