< Back
சினிமா செய்திகள்
மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் டைரக்டர் மோகன் ராஜா
சினிமா செய்திகள்

மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் டைரக்டர் மோகன் ராஜா

தினத்தந்தி
|
25 May 2024 5:41 PM IST

டைரக்டர் மோகன் ராஜா மீண்டும் தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்திலும் சிரஞ்சீவி முதன்மை பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளை இயக்குநர் மோகன் ராஜா துவங்கினார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இயக்குநர் மோகன் ராஜா தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்பாதர் படத்தை இயக்கினார்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படம் தான் காட்பாதர். இந்த படமும் வெற்றி பெற்றதை அடுத்து, இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்திலும் சிரஞ்சீவி முதன்மை பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தின் கதையை பி.வி.எஸ். ரவி எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான முதன்மை பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்று தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்